Sunday, April 8, 2007

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு வசந்தம் வாழத்தெரிந்தவர்களுக்கு..

வாழ்க்கை என்பது புரியாத புதிர். நாணயத்துக்கு இருபக்கம் போல, வாழ்க்கைக்கும், இரு பக்கங்களாக மகிழ்ச்சியும் வருத்தமும்.

எப்போது, தலையை சுத்தி காதைத் தொட்டு பள்ளியில் சேர்த்தார்களோ..அன்றே என் முழுச்சந்தோசந்திற்கும் முடுச்சுப் போட்டுவிட்டார்கள்.

எல்லாம் சந்தோசம் என்பது மாறி, எப்போதாவது சந்தோசம் என்ற நிலைக்கு மாறிவிட்டது என் வாழ்க்கை.

இருப்பினும், புரிய ஆரம்பித்தது வாழ்க்கை. விரிந்தது பார்வை, சுருங்கியது சுதந்திரம். பரந்த பூமியில் அவசரவாழ்க்கை ஓட்டத்தில், ஒரு ஓரமாக நானும் ஓட ஆரம்பிந்தேன்.

என்னதான் நாம் பல நிகழ்ச்சிகளை எதிர் கொண்டலும் , ஒருசில தருணங்கள் மட்டும், சொர்க்கம் எனச் சொல்லும் அளவிற்க்கு, மனதை எமாத்தாமல் மகிழ்ச்சியாக மாறும். அவை மட்டும் மனதில் பக்குவமாய் பசுமரத்து ஆணி போலப் பதிந்த்துவிடும்.

துன்பம் வாட்டும் போது, கோடையில் இளந்தென்றல் போல, பதிந்த எண்ணங்களின் நினைவுகள், சின்னச் சின்னச் சந்தோசங்களாய் மாறி நம்மைச் சமாதானப்படுத்தும்.

வாழ்ந்த அந்த அற்புத நிமிடங்கள், இனிமேல் மறுபடியும் வருமோ? வராதோ? ..இருப்பினும் நினைத்துப் பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் ஒரு சின்னச் சந்தோசம்.

இதற்காக, நான் கடந்த, காலங்களின் வசந்தங்க்ளை வார்த்தைகளாக்கி, "சுவையான சுவடுகள்" தலைப்பில் , பதிப்புகளாகப் பகிர்ந்துகொள்கிறேன்.