Monday, November 12, 2007

கெங்கவரத்தில் ஒரு நாள்

கெங்கவரத்தில் ஒரு நாள்.....பல நாள் கழித்து..பல மணி நேரத்தை, பலாச் சுளைக்கு இணையாகப், பயணித்ததை இங்கு பகிரிந்து கொள்ளப்போகிறேன்..

வெள்ளிக்கிழமை மாலை மணி ஐந்து.. அடித்துப் புடித்து கத்திப்பாராவை அடைந்து, ஒருவழியாக திருவண்ணாமலை பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.. கூட்டம் அதிகம் இல்லை.. உறங்குவதற்கு உத்தமமாக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்தேன்..

மாலை நேரம்..சிவப்புச் சூரியன் ஓய்வெடுக்க ஒதுங்கிக் கொண்டு இருந்தான்.. இதயத்துக்கு இதமாக பண்பலை பாடல்களின் தாலாட்டு ஒருபுறம், அழகிய சாலையில், அதிவேக ஓட்டத்தில், மாலைக் காற்றின் மயக்கம் மறுபுறம், என்னை அரியாமல் எப்போதும் போல், நித்திரையில் நிதானத்தை இழந்தேன்.. ஓரு மணி நேரம் ஓடிப் போனது..

அடுத்த இரு மணி நேரம், பார்க்காத ஊரைப் பற்றி பல கற்பனைகளுடன் மெதுவாக நகர்ந்தது.. செஞ்சியில் இறங்கிவிட்டு எனது நண்பன் ஊருக்காக, அடுத்த பேருந்துக்கு மாறினேன். செஞ்சியில் என்னை சந்திப்பதாக வாக்கு கொடுத்து ஏமாற்றிய என் நண்பது மிது எரிச்சல் ஒருபுறம், நிற்க கூட இடம் கிடைக்காமல் உடம்பின் உலைச்சல் மறுபுரம், என எப்படியோ முக்கால் மணி பயணத்தை முடித்தேன்..

நல்ல வேலை.. தொலைபேசியின் உதவியால் திட்டத் திருத்த்ங்களை எனது நண்பனுக்கு தெரிவிக்க, அவன் சரியான நேரத்திற்கு வந்து காத்திருந்தான்.. பேருந்தில் இருந்து இறங்கும், என்னை கவனிக்காமல் பேருந்துக்குள் தொலவிக் கொண்டிருக்கையில், பல வருடங்களுக்கு முன் என்னை பார்த்து இருந்த அவன் தம்பி அடையாலம் கண்டு கொள்ள, பிறகு அப்படியே அவன் வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேம்....

மணி பத்து இருக்கும். நண்பனின் அம்மா சுடச்சுட சப்பாத்தி தயார் செய்தார்கள். தொட்டுக்க, தக்காளி வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து காரமாக கிராமத்து வாசனையில் வதக்கி வைத்திருந்தர்கள். ஒரு அரைமணி நேரத்துக்கு எதையும் சட்டைபண்ணாமல், கணக்கில்லாமல் காலிபண்ணினோம் சப்பாத்திகளை..

வந்த கலைப்புத்தீர, காத்தாடி இருந்தும் பயன்படுத்தாமல், அருமையான தூக்கம்..எழும்போது மணி எட்டு இருக்கும். உண்மையான பசும்பாலில், அருமையாக அமமா தாயாரித்து வைத்து இருந்த தேனீரை பருகி விட்டு, எனது நண்பனின் நண்பர்களுடன் மலையை நோக்கி எங்க்ள் பயணத்தைத் தொடங்கினோம்..

ஐந்து நிமிட நடைக்கு பிறகு பச்சை பசேல் வயலின் வரப்புகள் எங்களுக்கு சாலைகளாக மாறியது. காலை நேரத்து கதிரவன் ஓய்வெடுத்த கலைப்பால் மெதுவாக எழுந்து கொண்டு இருந்தான். இருந்தாலும் குளுமை காற்றின் முன் கதிரவனின் ஒளி காணமல் போனதால், அழகிய துன்பமாக இருந்தது, எங்கள் நடை...



கிட்டத்தட்ட பத்து நிமிடம், வயல்களை தாண்ட, மலை அடிவாரத்தை அடைந்தோம்.. பெரிய மலை இல்லை, சிறு சிறு குன்றுகள் என்றாலும், மனிதனிடம் மாட்டாத இயற்கை படைப்புகள். ஆட்கள் நடந்ததால் உருவான ஒத்தை அடிப்பாதை. வழி நெடுக்கிளும் முற்புதர்களும், பெயர் தெரியாத செடி கொடிகளும்.. அங்காங்கே ஊத்து நீர், பாதையை வழி மறித்தது..



கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்து இருப்போம்.. போகும் வழி முழுவதையும் புகைப் படங்களாக என் புகைப் படக்கருவியில் பதித்தோம். நான் மட்டும் அல்ல, வந்த என் நண்பர்கள் அனைவரும், இயற்கையின் பாசங்கை, வித விதமான கோணங்களில், புகைப் படங்களாகப் பொருக்கினார்கள்...

அங்கு ஒரு பெரிய பாறை. ஏற முடியாது என என் நண்பன் சவால் விட.. சரி முயற்சி செய்து பார்ப்பது என முழு மூச்சில் இறங்கினேன். இரண்டு அடியில் நிலை தடுமாரி சருக்கி வில, நல்ல வேலை அடியெதுவும் பிடிக்கவில்லை. வெறி அதிகமானவனாய் வெற்றியுடன் ஏறி அதை புகை படமாகவும் எடுத்துக் கொண்டேன்



காலக் கடிவாலத்தால், பயணத்தை சுருக்கிக் கொண்டு, வந்த வழியை திரும்ப கால் பதித்தோம், ஆனால் எதிர் திசையில். வரும் வழியில் வயலுக்கு நடுவில், கிணத்தில் குளியல். கிட்டத்தட்ட ஒரு பத்து அடி ஆழத்தில் தண்ணி இருந்தது. படி இருந்ததால் பிரச்சனை ஒன்றும் இல்லை.



வரும் போது கல்லுச்சந்தில் ஒடிய உடும்பும், தண்ணிக்குள் ஓடி ஒழிந்த தண்ணிப் பாம்பும் ஒருபுறம் அச்சத்தை உமிழ்ந்தது என்மனதில். இருப்பினும் பல ஆண்டு கழித்து கிணத்தில் குளிக்கும் சந்தர்ப்பம். வீணாக்க விரும்பவில்லை, வீணாக்கினோம் ஒரு மணி நேரத்தை தண்ணியில்...

வீட்டை அடைந்தவுடன் அரிசி சாதத்துடன் மொச்சை குழம்பு. கூட காரமாய் அப்போதுதான் வதக்கி இறக்கிய மாங்காய் தொக்கு, வாழைக்காய் பொரியல், பீக்கங்காய் வறுவல், ரசம் என அனைத்தும்.. தனியாய் மாட்டிய என் நண்பனின் அத்தை மகனை கிண்டலும் கேலியுமாக முடித்தோம் மதிய உணவை..

பிறகு மாலை.. என் நண்பனின் மாமா வயளுக்கு நடைப் பயணம்.. அங்கு சூரிய ஒளி சுண்ட மறையும் வரை சும்மா அரட்டை அடித்து விட்டு வீடு திரும்பினோம்.. பல வருடங்களுக்கு பிறகு இருட்டில் விளக்கொளி இல்லாமல் நிதானத்தில் நடந்தேன் எண நினைக்கிறேன்..

இரவு, அரிசியுடன் முடக்கத்தான் கீரை கலந்து, இதுவரை பார்த்திரத பச்சை தோசை சுட்டதுடன், காரமாய் தக்காளி சட்னியும் அரைத்து வைத்து இருந்தர்கள் என் நண்பனின் அமமா அவர்கள்.. பிறகு இரவு உணவை இனிதே முடித்து விட்டு நான், எனது நண்பன், அவனுடைய மாமா பையன் மூவரும் மோட்டார் வாகனத்தில் அருகில் இருந்த நகரத்தில் இறக்கி என்னை விட, அங்கிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன்

Friday, October 26, 2007

நான் எடுத்த புகைப்படங்கள்





























மதியத்தில் மஞ்சள் ரோஜா















இரவில் சிவப்பு ரோஜா

Monday, September 10, 2007

இட்லி...!!!!

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை இட்லி..என்னட இட்லி சாப்பிட்டதை பெருமை பேசுகிறான் என நினைக்காதிர்கள்..ஒரு நண்பர் வீட்டில், இட்லியும் புளிச்சட்னியும், மற்றோருவர் வீட்டில் இட்லியும் நிலக்கடலை சட்னியும்..கூட சாம்பார் இருவீட்டிலும்..

நல்ல வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டு நாளு மாதமாகிய நிலையில், இன்னல்களுக்கிடையில் இனிமையான இட்லியை, எங்களுக்காக தயாரித்து பரிமாறிய எங்கள் நண்பர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை இன்னும் தொலவிக் கொண்டு இருக்கிறோம்..

இட்லி....இதோ இன்னும் சில இனிமையான நினைவுகள் ...

நான் சின்ன பயனாக இருந்த போது, வீட்டில் இட்லி என்றால், பண்டிகை என அருத்தம். அரவை இயந்திரம் இல்லாத காலம் அது. அன்றைய தினம் இட்லியும் தேங்காய் சட்னியும், ஆட்டி வைச்ச குழம்பும் காலை உணவு. பதார்த்தம் போட்டால் மட்டும் அல்ல இட்லி சுட்டாலும் கூட, பக்கத்து வீட்டுகாறார்களுக்கு, குழந்தைகளிடம் கொஞ்சம் கொடுத்துவிடுவார்கள்.

அப்போதெல்லாம் நோம்பி என்றால் நான் எங்க அம்மா ஊருக்கு போவேன். அங்கு சுத்தி முத்தியும் சொந்தக்காறார்கள் வீடுகள். அது கிராமம் என்பதால் எல்லா வீடுகளிலும் இட்லி.. இப்போதும் தீபாவளி பொங்கலக்கு காலையில் இட்லிதான்.

அரவை இயந்திரம் வந்தது, நான் இட்லியை வெருக்க ஆரம்பித்தேன். வருடத்தில் ஒரு சிலதடவை என்பது மாறி மாதத்தில் பல முறை என்றானது..காரணம் எளிமை, நேரம் குறைவு, தொலைக்காட்சி என நினைக்கிறேன்..

எங்க அப்பாவிற்கு முனு வாரத்திற்கு ஒரு முறை பகல் பணி.. ஆறே முக்காலுக்கு போய்ட்டு மாலை மூன்றைக்கு திரும்புவார். பகல் வேலை எனில் வாரத்தில் இரண்டுமுறை இட்லி தோசைதான். மதியத்திற்கும் அதே இட்லி எனது சோத்துப் புட்டியில்.. சுடாக இருக்கும் போது தான் இட்லி சுகம்.

இட்லியில் ஒரு சிலரின் கைக்குத்தான் மாவு புளிக்கும். மாவு புளித்தால்தான் இட்லி மெது மெதுவென இருக்கும்..எங்க அம்மா கூட எப்போதும் சண்டைதான்..இட்லி மெது மெது என இல்லை என்று...

காலையில், அலுவலகத்தில் இட்லியை நினைத்தால் இட்லிப் பிரியர்களும் எதிர் அணிக்கு தாவிவிடுவார்கள்..

நான்குமாதமாக எனது சமையல்..வாராவாரம் தெரிந்த அதே ஒன்று இரண்டு வகைகள்..செத்துபோன நாக்கிற்க்கு, புளிச்சட்டினியும், நிலக்கடலை சட்னியும், சொல்ல மொழி இல்லை சுவையின் அருமையை..

Wednesday, September 5, 2007

பள்ளிப் பருவம் - இரண்டு

பள்ளி வாழ்க்கை...பசுமரத்து ஆணிதான் ஒவ்வொருவருக்கும்...

நான் படித்த காலத்தில்.. காரத்தரை..சமணம் போட்டுத்தான் உட்கார வேண்டும்..குதிங்கால் முட்டியில் புள்ளி புள்ளியாய், கல் குத்தல்களின் சுவடுகள்.

இப்போது, குளிரூட்டி.. காத்தாடி இல்லாத வாழ்க்கை, கருங்கல் சிறைக்குள் கடின வாழ்க்கை..தெரியவில்லை எப்படி சமாலித்தேன், எட்டு வருட வாழ்க்கையை..??..புரியவில்லை..புலப்படவுமில்லை...!!!

தண்ணி..என்னால் எப்போதும் மறக்க முடியாது..எனது கூடை அதிக கணமாக இருக்கும்..ஒரு கேன் தண்ணி..மதியம் சாப்பாடு வரை கூட வராது..எங்கு பார்த்தாலும் தண்ணி கஷ்டம்..பக்கத்து வீட்டுகாரர்கள் பாவம்..எத்தனை பேர் தண்ணி தாகத்தை தீர்ப்பார்கள்..சாய்ங்கலம் ஒரு மைல் நடந்த பின்பு தான் தண்ணி..அப்போது எனக்கு மட்டும் இறையாற்றல் இருந்து இருந்திருந்தால் இணைத்து இருப்பேன், அனைத்து இந்திய நதிகளையும்..

நாளிதள்களில், பள்ளி குழ்ந்தைகளை வேலை வாங்குவதை படிக்கும் போது மனம் பதறுகிறது..ஒரு காலத்தில் நானும் அதுபோல் நடத்தப்பட்டதை நினைக்கும் போது நகைச்சுவையாகத்தான் உள்ளது..தம்மு வாங்கவும், தேனீர்வாங்கவும், வடை வாங்கவும் சாலையை கடந்தது இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது...அப்போது பெருமையாகத்தான் இருந்தது.. இப்போதும் இது போலத்தான் இருக்கிறது..இன்னும் மாறவில்லை என நினைக்கிறேன்...

பல ஆசிரியர்கள் இருந்தாலும், கதை சொல்லும் ஆசிரியர்கள்..அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வார்கள்..சிறுவர்மலர், பார்த்தது கூட இல்லை..பெரியவன் ஆன பின்புதான் தெரிந்தது அவர்களின் கதை கரு சிறுவர்மலர் என்று..எனது அரியாமையை நினைக்கும் போது சிரிப்பும் வந்தது சிந்திக்கவும் தோனியது..

Tuesday, May 22, 2007

பள்ளிப் பருவம் - ஒண்ணு

காலில 6 மணிக்கே எங்க அம்மா என்ன எழுப்பி விட்டுடும் ..அகில இந்திய வனொலில ஆங்கில செய்தி ஓடிகிட்டு இருக்கும். எனக்கும் எங்க அம்மாவுக்கும் அதுதா கடிகாரம்...

அப்படி இப்படி இன்னு கிளம்ப 8 மணி ஆயிடும். வேக வேகமா கொஞ்ச குழம்பு, அப்புரம் ரசம், கடைசியில் தயிர் ஊத்தி சாப்பிட்டுட்டு, அம்மா கொடுக்கும் 10 பைசாவை சட்டை பையில் போட்டுட்டு, மஞ்ச ஒயர் கூடையை தோலில் தூக்கி போட்டுகிட்டு நடக்க ஆரம்பிப்பேன் நண்பர்களுடன்...

ஒரு மைல் தூரம், இருந்தாலும் போர அலுப்புத் தெரியாது, விளையாடிட்டே போரதால...புலிங்கா அடிக்கிரது, ஒடக்கா அடிக்கிரது, சக்கரத்த ஒட விட்டு அதுக்கு பின்னாடி ஓடுரது, வேகமா வீட்டுக்கு வர்ரதுக்காக ஒரு கரண்டுமரம் விட்டு ஒரு கரண்டுமரம் ஓடுரது, எப்பவாவது யாரவது தெரிஞ்சவங்க வந்தா அவங்களொட சைக்க்ள்ல தொத்திக்கிறது, மாட்டு வண்டில பின்னாடி பைய மாட்டி விட்டுட்டு, பின்னாடியே ஒடிவர்ரது...இது போல இன்னும் பல அனுபவங்கள்..

மழை பேய்ந்தா மட்டும் பஸ்...ஒரு ருபாய்..போக 50 பைசா வர 50 பைசா..சாய்ங்களம் மழை வராட்டி மறுபடியும் நடைதான்..ஒரு சில நாள் மட்டும் அந்த 50 பைசாவே செலவு பண்ணிடுவே..இல்லாட்டி அம்மாகிட்டே திருப்பி கொடுத்துடுவே அந்த 50 பைசாவே..

யாரவது சொந்தகாரங்க வந்தா இன்னும் சந்தோசம்..என்ன கொஞ்ச அதிக காசு கிடைக்கும் வாங்கி திங்க...அதுவும் எங்க பெரியம்மா வந்த ரொம்ப சந்தோசப் படுரவ நனாத்தா இருப்பே....

புலிங்கா திங்கிரதுக்கு உப்பு மொலகாப் பொடி வேர..விட்டுல இருந்தே காகித பொட்டலத்துல...அதுலையும் துவுரு அடுச்சு, தொல்லிய கொஞ்சம் பிருச்சு, சாப்புடுர சுகமே சுகம்...

Wednesday, May 9, 2007

நான் வெச்சப் பாசிப்பருப்பு

இந்த வாரம் கடைக்குப் போன போது, பாசிப்பருப்பை பார்த்தவுடன், ஒரு ஈர்ப்பு, சரி சமைத்துத்தான் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன், ஒரு பொட்டலத்தை வாங்கிப் பொதியில் அடக்கினோம், நானும் கார்த்திக்கும்....

முழு நாளைக் கடத்திய அலுப்புடன், பாசிப்பருப்பை சமைத்துப் பார்ப்பது என்ற முடிவுடன் களம் இறங்கினேன்...அளவு தெரியவில்லை என்றாலும், ஒரு குத்துமதிப்பாக...அளவுகளை ஆளோசித்தவாரே ஆரம்பித்தேன் சமையலை...

என்னதான் நம்பிக்கை இருந்தாலும்,சமையல் சொதப்பும்பற்சத்தில் ஒரு பாதுகாப்பிற்காக... பாசிப் பயிர் ஒருபுறம் வேக, மறுபுரம் ரசத்தையும் தயார்பண்ணினேன்....

நினைத்ததைவிட சரியான சொதப்பல்...அதிக பருப்பைப் போட்டு இருந்தேன்..என்ன பண்ணுவது..மறுபடியும் கொஞ்சம் தக்காளி வெங்காயம் எல்லாம் பொட்டு ஒரு வழியாக தேத்தினேன் சாப்பிடும் அளவிற்க்கு...

மறந்த கொத்துமல்லியை ஈடு செய்ய...கொத்துமல்லி பொடியைப் பொட்டு இறக்கினேன்...

இப்படி அப்படி என்று..மற்றவர்கள் பாரட்டும் அளவிற்கு பக்குவமாக வந்தது கடைசியில்...

பழைய காலப் பள்ளி மதிய உணவு நினைவுகளை அசை போட்டப்படி..இரவு உணவை இனிதே முடித்தோம்..நானும் எனது நண்பர்களும்

Sunday, April 8, 2007

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு வசந்தம் வாழத்தெரிந்தவர்களுக்கு..

வாழ்க்கை என்பது புரியாத புதிர். நாணயத்துக்கு இருபக்கம் போல, வாழ்க்கைக்கும், இரு பக்கங்களாக மகிழ்ச்சியும் வருத்தமும்.

எப்போது, தலையை சுத்தி காதைத் தொட்டு பள்ளியில் சேர்த்தார்களோ..அன்றே என் முழுச்சந்தோசந்திற்கும் முடுச்சுப் போட்டுவிட்டார்கள்.

எல்லாம் சந்தோசம் என்பது மாறி, எப்போதாவது சந்தோசம் என்ற நிலைக்கு மாறிவிட்டது என் வாழ்க்கை.

இருப்பினும், புரிய ஆரம்பித்தது வாழ்க்கை. விரிந்தது பார்வை, சுருங்கியது சுதந்திரம். பரந்த பூமியில் அவசரவாழ்க்கை ஓட்டத்தில், ஒரு ஓரமாக நானும் ஓட ஆரம்பிந்தேன்.

என்னதான் நாம் பல நிகழ்ச்சிகளை எதிர் கொண்டலும் , ஒருசில தருணங்கள் மட்டும், சொர்க்கம் எனச் சொல்லும் அளவிற்க்கு, மனதை எமாத்தாமல் மகிழ்ச்சியாக மாறும். அவை மட்டும் மனதில் பக்குவமாய் பசுமரத்து ஆணி போலப் பதிந்த்துவிடும்.

துன்பம் வாட்டும் போது, கோடையில் இளந்தென்றல் போல, பதிந்த எண்ணங்களின் நினைவுகள், சின்னச் சின்னச் சந்தோசங்களாய் மாறி நம்மைச் சமாதானப்படுத்தும்.

வாழ்ந்த அந்த அற்புத நிமிடங்கள், இனிமேல் மறுபடியும் வருமோ? வராதோ? ..இருப்பினும் நினைத்துப் பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் ஒரு சின்னச் சந்தோசம்.

இதற்காக, நான் கடந்த, காலங்களின் வசந்தங்க்ளை வார்த்தைகளாக்கி, "சுவையான சுவடுகள்" தலைப்பில் , பதிப்புகளாகப் பகிர்ந்துகொள்கிறேன்.