Wednesday, May 9, 2007

நான் வெச்சப் பாசிப்பருப்பு

இந்த வாரம் கடைக்குப் போன போது, பாசிப்பருப்பை பார்த்தவுடன், ஒரு ஈர்ப்பு, சரி சமைத்துத்தான் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன், ஒரு பொட்டலத்தை வாங்கிப் பொதியில் அடக்கினோம், நானும் கார்த்திக்கும்....

முழு நாளைக் கடத்திய அலுப்புடன், பாசிப்பருப்பை சமைத்துப் பார்ப்பது என்ற முடிவுடன் களம் இறங்கினேன்...அளவு தெரியவில்லை என்றாலும், ஒரு குத்துமதிப்பாக...அளவுகளை ஆளோசித்தவாரே ஆரம்பித்தேன் சமையலை...

என்னதான் நம்பிக்கை இருந்தாலும்,சமையல் சொதப்பும்பற்சத்தில் ஒரு பாதுகாப்பிற்காக... பாசிப் பயிர் ஒருபுறம் வேக, மறுபுரம் ரசத்தையும் தயார்பண்ணினேன்....

நினைத்ததைவிட சரியான சொதப்பல்...அதிக பருப்பைப் போட்டு இருந்தேன்..என்ன பண்ணுவது..மறுபடியும் கொஞ்சம் தக்காளி வெங்காயம் எல்லாம் பொட்டு ஒரு வழியாக தேத்தினேன் சாப்பிடும் அளவிற்க்கு...

மறந்த கொத்துமல்லியை ஈடு செய்ய...கொத்துமல்லி பொடியைப் பொட்டு இறக்கினேன்...

இப்படி அப்படி என்று..மற்றவர்கள் பாரட்டும் அளவிற்கு பக்குவமாக வந்தது கடைசியில்...

பழைய காலப் பள்ளி மதிய உணவு நினைவுகளை அசை போட்டப்படி..இரவு உணவை இனிதே முடித்தோம்..நானும் எனது நண்பர்களும்