Monday, September 10, 2007

இட்லி...!!!!

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை இட்லி..என்னட இட்லி சாப்பிட்டதை பெருமை பேசுகிறான் என நினைக்காதிர்கள்..ஒரு நண்பர் வீட்டில், இட்லியும் புளிச்சட்னியும், மற்றோருவர் வீட்டில் இட்லியும் நிலக்கடலை சட்னியும்..கூட சாம்பார் இருவீட்டிலும்..

நல்ல வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டு நாளு மாதமாகிய நிலையில், இன்னல்களுக்கிடையில் இனிமையான இட்லியை, எங்களுக்காக தயாரித்து பரிமாறிய எங்கள் நண்பர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை இன்னும் தொலவிக் கொண்டு இருக்கிறோம்..

இட்லி....இதோ இன்னும் சில இனிமையான நினைவுகள் ...

நான் சின்ன பயனாக இருந்த போது, வீட்டில் இட்லி என்றால், பண்டிகை என அருத்தம். அரவை இயந்திரம் இல்லாத காலம் அது. அன்றைய தினம் இட்லியும் தேங்காய் சட்னியும், ஆட்டி வைச்ச குழம்பும் காலை உணவு. பதார்த்தம் போட்டால் மட்டும் அல்ல இட்லி சுட்டாலும் கூட, பக்கத்து வீட்டுகாறார்களுக்கு, குழந்தைகளிடம் கொஞ்சம் கொடுத்துவிடுவார்கள்.

அப்போதெல்லாம் நோம்பி என்றால் நான் எங்க அம்மா ஊருக்கு போவேன். அங்கு சுத்தி முத்தியும் சொந்தக்காறார்கள் வீடுகள். அது கிராமம் என்பதால் எல்லா வீடுகளிலும் இட்லி.. இப்போதும் தீபாவளி பொங்கலக்கு காலையில் இட்லிதான்.

அரவை இயந்திரம் வந்தது, நான் இட்லியை வெருக்க ஆரம்பித்தேன். வருடத்தில் ஒரு சிலதடவை என்பது மாறி மாதத்தில் பல முறை என்றானது..காரணம் எளிமை, நேரம் குறைவு, தொலைக்காட்சி என நினைக்கிறேன்..

எங்க அப்பாவிற்கு முனு வாரத்திற்கு ஒரு முறை பகல் பணி.. ஆறே முக்காலுக்கு போய்ட்டு மாலை மூன்றைக்கு திரும்புவார். பகல் வேலை எனில் வாரத்தில் இரண்டுமுறை இட்லி தோசைதான். மதியத்திற்கும் அதே இட்லி எனது சோத்துப் புட்டியில்.. சுடாக இருக்கும் போது தான் இட்லி சுகம்.

இட்லியில் ஒரு சிலரின் கைக்குத்தான் மாவு புளிக்கும். மாவு புளித்தால்தான் இட்லி மெது மெதுவென இருக்கும்..எங்க அம்மா கூட எப்போதும் சண்டைதான்..இட்லி மெது மெது என இல்லை என்று...

காலையில், அலுவலகத்தில் இட்லியை நினைத்தால் இட்லிப் பிரியர்களும் எதிர் அணிக்கு தாவிவிடுவார்கள்..

நான்குமாதமாக எனது சமையல்..வாராவாரம் தெரிந்த அதே ஒன்று இரண்டு வகைகள்..செத்துபோன நாக்கிற்க்கு, புளிச்சட்டினியும், நிலக்கடலை சட்னியும், சொல்ல மொழி இல்லை சுவையின் அருமையை..

Wednesday, September 5, 2007

பள்ளிப் பருவம் - இரண்டு

பள்ளி வாழ்க்கை...பசுமரத்து ஆணிதான் ஒவ்வொருவருக்கும்...

நான் படித்த காலத்தில்.. காரத்தரை..சமணம் போட்டுத்தான் உட்கார வேண்டும்..குதிங்கால் முட்டியில் புள்ளி புள்ளியாய், கல் குத்தல்களின் சுவடுகள்.

இப்போது, குளிரூட்டி.. காத்தாடி இல்லாத வாழ்க்கை, கருங்கல் சிறைக்குள் கடின வாழ்க்கை..தெரியவில்லை எப்படி சமாலித்தேன், எட்டு வருட வாழ்க்கையை..??..புரியவில்லை..புலப்படவுமில்லை...!!!

தண்ணி..என்னால் எப்போதும் மறக்க முடியாது..எனது கூடை அதிக கணமாக இருக்கும்..ஒரு கேன் தண்ணி..மதியம் சாப்பாடு வரை கூட வராது..எங்கு பார்த்தாலும் தண்ணி கஷ்டம்..பக்கத்து வீட்டுகாரர்கள் பாவம்..எத்தனை பேர் தண்ணி தாகத்தை தீர்ப்பார்கள்..சாய்ங்கலம் ஒரு மைல் நடந்த பின்பு தான் தண்ணி..அப்போது எனக்கு மட்டும் இறையாற்றல் இருந்து இருந்திருந்தால் இணைத்து இருப்பேன், அனைத்து இந்திய நதிகளையும்..

நாளிதள்களில், பள்ளி குழ்ந்தைகளை வேலை வாங்குவதை படிக்கும் போது மனம் பதறுகிறது..ஒரு காலத்தில் நானும் அதுபோல் நடத்தப்பட்டதை நினைக்கும் போது நகைச்சுவையாகத்தான் உள்ளது..தம்மு வாங்கவும், தேனீர்வாங்கவும், வடை வாங்கவும் சாலையை கடந்தது இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது...அப்போது பெருமையாகத்தான் இருந்தது.. இப்போதும் இது போலத்தான் இருக்கிறது..இன்னும் மாறவில்லை என நினைக்கிறேன்...

பல ஆசிரியர்கள் இருந்தாலும், கதை சொல்லும் ஆசிரியர்கள்..அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வார்கள்..சிறுவர்மலர், பார்த்தது கூட இல்லை..பெரியவன் ஆன பின்புதான் தெரிந்தது அவர்களின் கதை கரு சிறுவர்மலர் என்று..எனது அரியாமையை நினைக்கும் போது சிரிப்பும் வந்தது சிந்திக்கவும் தோனியது..