Monday, September 10, 2007

இட்லி...!!!!

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை இட்லி..என்னட இட்லி சாப்பிட்டதை பெருமை பேசுகிறான் என நினைக்காதிர்கள்..ஒரு நண்பர் வீட்டில், இட்லியும் புளிச்சட்னியும், மற்றோருவர் வீட்டில் இட்லியும் நிலக்கடலை சட்னியும்..கூட சாம்பார் இருவீட்டிலும்..

நல்ல வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டு நாளு மாதமாகிய நிலையில், இன்னல்களுக்கிடையில் இனிமையான இட்லியை, எங்களுக்காக தயாரித்து பரிமாறிய எங்கள் நண்பர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை இன்னும் தொலவிக் கொண்டு இருக்கிறோம்..

இட்லி....இதோ இன்னும் சில இனிமையான நினைவுகள் ...

நான் சின்ன பயனாக இருந்த போது, வீட்டில் இட்லி என்றால், பண்டிகை என அருத்தம். அரவை இயந்திரம் இல்லாத காலம் அது. அன்றைய தினம் இட்லியும் தேங்காய் சட்னியும், ஆட்டி வைச்ச குழம்பும் காலை உணவு. பதார்த்தம் போட்டால் மட்டும் அல்ல இட்லி சுட்டாலும் கூட, பக்கத்து வீட்டுகாறார்களுக்கு, குழந்தைகளிடம் கொஞ்சம் கொடுத்துவிடுவார்கள்.

அப்போதெல்லாம் நோம்பி என்றால் நான் எங்க அம்மா ஊருக்கு போவேன். அங்கு சுத்தி முத்தியும் சொந்தக்காறார்கள் வீடுகள். அது கிராமம் என்பதால் எல்லா வீடுகளிலும் இட்லி.. இப்போதும் தீபாவளி பொங்கலக்கு காலையில் இட்லிதான்.

அரவை இயந்திரம் வந்தது, நான் இட்லியை வெருக்க ஆரம்பித்தேன். வருடத்தில் ஒரு சிலதடவை என்பது மாறி மாதத்தில் பல முறை என்றானது..காரணம் எளிமை, நேரம் குறைவு, தொலைக்காட்சி என நினைக்கிறேன்..

எங்க அப்பாவிற்கு முனு வாரத்திற்கு ஒரு முறை பகல் பணி.. ஆறே முக்காலுக்கு போய்ட்டு மாலை மூன்றைக்கு திரும்புவார். பகல் வேலை எனில் வாரத்தில் இரண்டுமுறை இட்லி தோசைதான். மதியத்திற்கும் அதே இட்லி எனது சோத்துப் புட்டியில்.. சுடாக இருக்கும் போது தான் இட்லி சுகம்.

இட்லியில் ஒரு சிலரின் கைக்குத்தான் மாவு புளிக்கும். மாவு புளித்தால்தான் இட்லி மெது மெதுவென இருக்கும்..எங்க அம்மா கூட எப்போதும் சண்டைதான்..இட்லி மெது மெது என இல்லை என்று...

காலையில், அலுவலகத்தில் இட்லியை நினைத்தால் இட்லிப் பிரியர்களும் எதிர் அணிக்கு தாவிவிடுவார்கள்..

நான்குமாதமாக எனது சமையல்..வாராவாரம் தெரிந்த அதே ஒன்று இரண்டு வகைகள்..செத்துபோன நாக்கிற்க்கு, புளிச்சட்டினியும், நிலக்கடலை சட்னியும், சொல்ல மொழி இல்லை சுவையின் அருமையை..

2 comments:

Rajesh Anandakrishnan said...

Another good blog one Bala. Before leaving to India come home for dinner :)

Anonymous said...

Zodiac Year: Monkey

ithukku enna artham ?